"விஜய்தான் வேட்பாளர்.. வேட்பாளர்தான் விஜய்!"- நெல்லையில் விஜய் அதிரடி முழக்கம்

நம்ம குடும்பத்தில் உள்ள ஒருவரைதான் தவெக வேட்பாளராக நிறுத்தி உள்ளேன்.
"விஜய்தான் வேட்பாளர்.. வேட்பாளர்தான் விஜய்!"- நெல்லையில் விஜய் அதிரடி முழக்கம்
Published on

நெல்லை கே.டி.சி நகரில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் உரையாற்றி வருகிறார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கரூர் விஷயத்தில் என் மீது பழி போட்டாலும் மக்கள் என் பக்கமே இருந்தார்கள். வேறு என்ன செய்யலாம் என யோசித்து ஜனநாயகன் படத்தை முடக்கினார்கள், அதுவும் எடுபடவில்லை.

விஜய்க்கு மட்டும் தனி கண்டிஷன் போட்டு மக்களை சந்திக்க விடாமல் செய்யலாம் என யோசித்தார்கள் அதுவும் எடுபடவில்லை.

எதுவும் எடுபடவில்லை என்பதால் தேர்தல் நேரத்தில் மிகச்சரியாக ஒரு அவதூறை பரப்பினார்கள், அதுவும் ஈடுபடவில்லை.

இத்தனை வருடம் யார் யாருக்கோ ஓட்டுப்போட்டோம், இம்முறை நமக்கு நாமே ஓட்டுபோடுவோம்.

நம்ம குடும்பத்தில் உள்ள ஒருவரைதான் தவெக வேட்பாளராக நிறுத்தி உள்ளேன். விஜய் தான்வேட்பாளர். வேட்பாளர் தான் விஜய்.

தற்போது நடைபெறவுள்ள தேர்தல் ஒரு அதிசய தேர்தல், 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் தேர்தல். இப்படி ஒரு எமோஷனலான தேர்தலை தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவே பார்க்கவில்லை.

ஆட்சி முழுக்க ஊழல் ஊழல் என ஊறிப்போய் நாறிப்போய் உள்ளது. எந்த முகத்தை வைத்து ஓட்டு கேட்டு வருகிறீர்கள் முதல்வர் சார்?

இயற்கை உபாதை கழிக்க ஒதுங்கிய பள்ளி சிறுமி உயிர் பறிபோனது, இதற்கு பதில் என்ன ஸ்டாலின் சார்?

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை, இரண்டரை வயது குழந்தையை திமுக நிர்வாகி கொன்றானே அதற்கு பதில் என்ன?

நாங்குநேரி விவகாரம் போதையில் நடந்தது என விளக்கம் அளிக்கிறார். அது எங்களுக்கு தெரியாதா ஸ்டாலின் சார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com