‘விஜய்க்கு பிரதமர், அஜித்திற்கு முதலமைச்சர் ஆகும் யோகம் உள்ளது’ - ரிக்கி ரத்தன் பண்டிட் பேட்டி!

2029-ல் மோடி மீண்டும் பிரதமர் ஆகமாட்டார் என ரத்தன் பண்டிட் கணிப்பு.
‘விஜய்க்கு பிரதமர், அஜித்திற்கு முதலமைச்சர் ஆகும் யோகம் உள்ளது’ - ரிக்கி ரத்தன் பண்டிட் பேட்டி!
Published on

அண்மையில் தமிழ்நாடு அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியவர் பிரபல ஜோதிடரும், தமிழக தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளருமான ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல். இவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆன்மீக வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு நேற்றுமுன் தினம் நியமிக்கப்பட்டு, கடுமையான அரசியல் எதிர்ப்புகள் காரணமாக ஒரே நாளில் அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில் இவர் தனியார் ஊடகத்திற்கு இன்று அளித்த பேட்டியில், நடிகர் விஜய் இந்தியாவின் பிரதமராகவும், நடிகர் அஜித் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் மாறும் அரசியல் யோகம் உள்ளதாகக் கணித்துக் கூறியுள்ளார். மேலும் 2029-ல் மோடி மீண்டும் பிரதமராவது கடினம் எனவும், அப்போது விஜய் தன் யோகத்தின் உச்சத்தில் இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு அஜித் அரசியலில் ஆர்வம் காட்டாமல் இருந்தாலும், அவரது ஜாதகப்படி அவருக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராகும் வாய்ப்பு இருந்ததாகவும் கூறியுள்ளார். இதுதொடர்பாக அஜித்தை தொடர்புகொண்டு பேசியதாகவும், ஆனால் தனக்கு இதில் விருப்பமில்லை என அஜித் சொல்லியதாகவும் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com