த.வெ.க. வெற்றிக்காக திருத்தணியில் தியானம் செய்த விஜய்யின் தந்தை

தமிழக வெற்றிக் கழகம் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டி எஸ்.ஏ.சந்திரசேகர் சாமி தரிசனம் செய்தார்.
த.வெ.க. வெற்றிக்காக திருத்தணியில் தியானம் செய்த விஜய்யின் தந்தை
Published on

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் திருத்தணி சுப்ரமணி சுவாமி கோவிலில் இன்று காலை 7 மணியளவில் நடிகர் விஜய்யின் தந்தையும் திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் சாமி தரிசனம் செய்தார். அவர் 100 ரூபாய் கட்டண சேவையில் சுப்பிரமணிய சாமியை வேண்டினார். பின்னர் உற்சவர் முருகப்பெருமானையும் வழிபட்டார். தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டி அவர் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் எஸ்.ஏ.சந்திர சேகர் கோவில் வளாகத்தில் சுமார் 10 நிமிடங்கள் தியானமும் செய்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com