காரைக்குடியில் நாளை விஜய் தேர்தல் பிரசாரம்

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 11 மணியளவில் மதுரைக்கு வரும் அவர் சாலை மார்க்கமாக காரைக்குடிக்கு செல்கிறார்.
காரைக்குடியில் நாளை விஜய் தேர்தல் பிரசாரம்
Published on

தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி நாளை (10-ந்தேதி) சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் விஜய் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 11 மணியளவில் மதுரைக்கு வரும் அவர் சாலை மார்க்கமாக காரைக்குடிக்கு செல்கிறார்.

காரைக்குடி தேவர் சிலை அருகே மதியம் 12 மணி முதல் மாலை 4 மணிக்குள் பிரசார கூட்டத்திற்கு அனுமதி கேட்டு த.வெ.க.வினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு செய்திருந்தனர்.

இதையொட்டி தேர்தல் கமிஷன் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.தொடர்ந்து அதிகாரிகள் பிரசாரத்திற்கு அனுமதி கேட்ட இடத்தை ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் த.வெ.க. நிர்வாகிகளிடம் பிரசார கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்தும் எத்தனை பேர் பங்கேற் பார்கள் என்ற விபரத்தையும் கேட்டறிந்தனர். நாளை தேர்தல் பிரசாரத்திற்காக காரைக்குடிக்கு வரும் நடிகர் விஜய் மாவட்ட எல்லையில் இருந்து திறந்த வேனில் சென்று ரோடு ஷோ மூலம் மக்களை சந்திப்பார் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று விஜய் பிரசார கூட்டத்திற்கு சில நிபந்தனைகளுடன் அனுமதி கிடைக்கும் என தமிழக வெற்றிக் கழகத்தினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com