நீலாங்கரையில் இருந்து புறப்பட்ட விஜய்... இன்று இரவு கேரளம் செல்லும் கவர்னர்?- தமிழக அரசியலில் திக்... திக்... நிமிடங்கள்

தமிழக கூடுதல் பொறுப்பு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று இரவு 7.10 மணிக்கு கேரளம் புறப்பட்டு செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
நீலாங்கரையில் இருந்து புறப்பட்ட விஜய்... இன்று இரவு கேரளம் செல்லும் கவர்னர்?- தமிழக அரசியலில் திக்... திக்... நிமிடங்கள்
Published on

தமிழ்நாட்டில் அரசியல் களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. த.வெ.க.வுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான 2 இடங்களுக்காக விடுதலை சிறுத்தைகள் என்ன மாதிரியான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்ப்பு தமிழ்நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, த.வெ.க.வுக்கு ஆதரவா? என்பது தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்து உள்ள நிலையில் இன்னும் சில நிமிடங்களே உள்ள நிலையில், தமிழ்நாடு மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது.

காலையில் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்த த.வெ.க. தலைவர் விஜய் தற்சமயம் நீலாங்கரை வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். இதனிடையே, விடுதலை சிறுத்தைகள் தனது ஆதரவு கடிதத்தை ஆதவ் அர்ஜூனாவிடம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே, தமிழக கூடுதல் பொறுப்பு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று இரவு 7.10 மணிக்கு கேரளம் புறப்பட்டு செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com