மீண்டும் எழும்பூரிலிருந்து புறப்படுகிறது வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

எழும்பூர்-வேளாங்கண்ணி இடையேயான எக்ஸ்பிரஸ் ரெயில் தற்காலிகமாக தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது.
ரெயில்
Published on

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு பணி காரணமாக எழும்பூர்-வேளாங்கண்ணி இடையேயான எக்ஸ்பிரஸ் ரெயில் தற்காலிகமாக தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த ரெயில் மீண்டும் எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது.

எழும்பூரில் இருந்து வருகிற ஜூலை 1-ந்தேதி முதலும், வேளாங்கண்ணியில் இருந்து வருகிற 30-ந்தேதி முதலும் அமலுக்கு வருகிறது. அதன் நேர அட்டவணை வருமாறு:-

சென்னை எழும்பூரில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16175), தாம்பரத்திற்கு இரவு 9.28 மணிக்கு செல்லும் அங்கிருந்து 9.30 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணி செல்லும். மறுமார்க்கமாக, வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16176), தாம்பரத்திற்கு அதிகாலை 4.08 மணிக்கும், அங்கிருந்து எழும்பூருக்கு காலை 5.15 மணிக்கும் வந்தடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com