விருதுநகர் அருகே லாரி மீது வாகனங்கள் மோதி விபத்து- 3 பேர் பலி

லாரி ஓட்டுநர் பிரேக் பிடித்ததால் பின்னால் வந்த இருசக்கர வாகனம் மற்றும் மினி சரக்கு வாகனம் அடுத்தடுத்து மோதிய விபத்துக்குள்ளானது. மினி சரக்கு வாகனத்தில் வந்த மற்றொருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
விருதுநகர் அருகே லாரி மீது வாகனங்கள் மோதி விபத்து- 3 பேர் பலி
Published on

விருதுநகர்:

மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் அருகே அதிகாலையில் வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

விருதுநகர் அருகே லாரி ஓட்டுநர் சட்டென பிரேக் பிடித்ததால் பின்னால் வந்த இருசக்கர வாகனம் மற்றும் மினி சரக்கு வாகனம் அடுத்தடுத்து மோதிய விபத்துக்குள்ளானது. இந்த வாகன விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மினி சரக்கு வாகனத்தில் வந்த மற்றொருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com