

தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் கட்சி த.வெ.க. வுக்கு ஆதரவு தெரிவித்தது. அதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளும் த.வெ.க. ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் மூலம் த.வெ.க. 116 எம்.எல்.ஏ.க்கள் பலத்தை பெற்றுள்ளது. இருப்பினும் ஆட்சி அமைக்க இன்னும் 2 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலை உள்ளது.
இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது நிலைப்பாட்டை மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் தனது முடிவை அறிவித்த பின்னர் தவெக தலைவர் விஜய் விசிக அலுவலகத்திற்கு வருவார் என்பதால் அங்கு தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
இந்நிலையில் விசிக அலுவலகத்திற்கு புதிய சோஃபாக்கள் கொண்டு வரப்பட்டது. விசிக அலுவலகத்திற்கு விஜய் வருவதால் இந்த ஏற்பாடு செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.