தவெக அமைச்சரவையில் விசிக... அமைச்சராகும் வன்னியரசு!

இதன்மூலம் அமைச்சரவையில் முதன்முதலாக பங்கேற்கிறது விசிக.
தவெக அமைச்சரவையில் விசிக... நாளை பொறுப்பேற்கிறார் வன்னியரசு!
Published on

தவெக அமைச்சரவையில் விசிக பங்கேற்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

தவெக தரப்பில் இருந்து விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம்பெற முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், விசிக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் அமைச்சரவையில் முதன்முதலாக பங்கேற்கிறது விசிக.

விசிக தரப்பில் வன்னி அரசு அமைச்சராக பொறுப்பேற்பார் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். தவெக அமைச்சரவையில் இடம்பெற்றாலும், கூட்டணி தொடர்பான நிலைப்பாடு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ஐயூஎம்எஸ் கட்சியில் இருந்து பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ. ஷாஜஹான் அமைச்சராக பொறுப்பேற்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com