மருத்துவமனையில் இருந்து வீடியோ வெளியிட்ட வானதி சீனிவாசன்!

மருத்துவமனையில் உள்ள தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் இருந்து வீடியோ வெளியிட்ட வானதி சீனிவாசன்!
Published on

பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை வடக்கு தொகுதி வேட்பாளருமான வானதி சீனிவாசன், தீவிர தேர்தல் பரப்புரையின் போது ஏற்பட்ட கால் வீக்கம் மற்றும் தொற்று காரணமாக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவர் நலமாக இருப்பதாகவும், மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

“உங்களுடைய அன்பினாலும், பிரார்த்தனைகளாலும் விரைவில் உடல்நலம் தேறிவருகிறேன். ஒன்றிரண்டு நாட்களில் அனைவரையும் வந்து சந்திக்க இருக்கிறேன். நம்முடைய தேர்தல் பிரச்சாரம் தொடர்ச்சியாக நடைபெறவேண்டும். எனக்காக கோவை வடக்கில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள். இன்று பாஜக பூத் நிர்வாகிகளுடன் பிரதமர் கலந்தாலோசிக்கிறார்.

நமோ ஆப் செயலி மூலம் அக்கூட்டத்தில் கலந்து இந்நிகழ்வை வெற்றிக்கரமாக ஆக்கவேண்டும். தமிழ்நாடுமீது அளப்பரிய அன்பும், தமிழ்நாட்டின் ஆற்றல்மீது அசைக்கமுடியாத நம்பிக்கையும் வைத்திருக்ககூடிய மோடிக்கு, ஏன்டிஏ கூட்டணியில் வெற்றியின் மூலம் நமது அன்பை தெரிவிக்கவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com