Video | சுவையான தமிழ் உணவு... BJP நிர்வாகியின் வீட்டில் மதிய உணவு அருந்திய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ

பாஜக நிர்வாகியின் வீட்டில் மதிய உணவு அருந்திய வீடியோவை கிரண் ரிஜிஜூ தந்து எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
 Kiren Rijiju
Kiren Rijiju
Published on: 

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தமிழ்நாடு வந்துள்ளார். இந்நிலையில், பாஜக நிர்வாகியின் வீட்டில் மதிய உணவு அருந்திய வீடியோவை கிரண் ரிஜிஜூ தந்து எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், "செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக தலைவரான திரு. ரகுராமன் நரசிம்மன் அவர்கள், ஒரு பாரம்பரிய மதிய விருந்தை ஏற்பாடு செய்து அளித்தமைக்கு நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். உண்மையான தமிழ் உணவு மிகவும் சுவையாக இருந்தது!" என்று தெரிவித்துள்ளார்.

'இந்த பொறப்பு தான் நல்லா ருசிச்சு சாப்பிட கிடைச்சது' என்ற பாடலுடன் அந்த வீடியோவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பகிர்ந்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com