

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 17வது கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இன்று தொடங்கி, தமிழக ஆளுநர் அர்லேகர் உரையை வாசித்தார்.
தமிழ்நாடு அரசு கொடுத்த உரையை அப்படியே மாற்றமின்றி சட்டசபையில் ஆளுநர் அர்லேகர் வாசித்தார்.
கடந்த சில ஆண்டுகளாக அரசின் உரை வாசிக்கப்படாதது பேசுபொருளான நிலையில் புதிய ஆளுநர் உரையை அப்படியே வாசித்தார்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருக்குறளை குறிப்பிட்டு தனது உரையை ஆளுநர் அர்லேகர் நிறைவு செய்தார்.
இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் உரை குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* ஆளுநர் அர்லேகர் சட்டசபையில் இன்று வாசித்தது தவெக அரசு தயாரித்துக்கொடுத்த உரை.
* ஆளுநர் உரை தமிழக அரசின் கொள்கை உரை.
* தவெக அரசு எழுதிக்கொடுத்ததை ஆளுநர் வாசித்துள்ளார்.
* ஆளுங்கட்சியினர் ரீல்ஸ் போடுவதற்கான கன்டென்ட் மெட்டீரியலாக ஆளுநர் உரை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.