

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு சுமார் ரூ.3 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் மேற்காசியப் போர்ச் சூழல் காரணமாக, எண்ணெய் நிறுவனங்கள் இந்த விலை உயர்வை அறிவித்துள்ளன.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "ஏழை - எளிய - நடுத்தர வர்க்க மக்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையில் Petrol, Diesel, CNG விலையை ஒன்றிய அரசு உயர்த்தி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த விலை ஏற்றத்தின் மூலம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிட்டு, ‘பொறுத்துக்கொள்ளுங்கள், அதைச் செய்யாதீர்கள், இதைச் செய்யாதீர்கள்’ என்று ஒன்றிய அரசு அறிவுரை கூறுவது, தனது தோல்வியை மறைக்கும் முயற்சியே ஆகும்.
மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள இந்த சுமையை குறைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்," என குறிப்பிட்டுள்ளார்.