தந்தை பெரியார் படத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை

தந்தை பெரியாரின் 51வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியார் படத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை
Published on

தந்தை பெரியாரின் 51வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் இன்று காலை முதலே தந்தை பெரியாருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், த.வெ.க. தலைவர் விஜய் தந்தை பெரியார் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பெரும்பாடுபட்ட சுயமரியாதைச் சுடர் எங்கள் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் 51ஆவது நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்."

"அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூக நீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com