த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் தேர்வு பணி தீவிரம்

கட்சி வளர்ச்சி பணிகளில் விஜய் தீவிரம் காட்டி வருகிறார்.மாவட்ட செயலாளர்களின் பட்டியல் ஜனவரியில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் தேர்வு பணி தீவிரம்
Published on

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 2026 சட்டமன்ற தேர்தலில் களம் இறங்குகிறது. தனித்து போட்டியா அல்லது கூட்டணி அமைத்து களம் காண்பதா என்பதை இன்னும் விஜய் அறிவிக்கவில்லை. அதேநேரம், கட்சி வளர்ச்சி பணிகளில் அவர் தீவிரம் காட்டி வருகிறார்.

முதல் அரசியல் மாநாட்டை மிகப் பிரமாண்டமாக நடத்தியதுடன், அதனைத் தொடர்ந்து கட்சியின் செயற்குழுவை கூட்டி ஆலோசனை நடத்தினார் விஜய்.

இந்நிலையில் த.வெ.க. மாவட்ட செயலாளர்களின் பட்டியல் ஜனவரியில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது மாவட்ட செயலாளர்களை தேர்வு செய்யும் பணி நடைபெறுவதாகவும், மாவட்ட செயலாளர்கள் 100 பேர் மற்றும் அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மாவட்ட செயலாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக கழக நிர்வாகிகள், அணி தலைவர்களிடம் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கருத்து கேட்டு வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com