இன்று மாலை த.வெ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு மற்ற கட்சிகளை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் உட்பட பலரும் த.வெ.க.வில் இணைந்து வருகின்றனர்.
தவெக அலுவலகம்
Published on

சென்னை பனையூரில் இன்று மாலை 3 மணிக்கு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு மற்ற கட்சிகளை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் உட்பட பலரும் த.வெ.க.வில் இணைந்து வருகின்றனர். இதனால் புஸ்சி ஆனந்த் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சி வளர்ச்சிப் பணிகள், புதிதாக இணைந்தோருக்கு பதவி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக, த.வெ.க.வினர் தங்களது எல்லை என்ன என்பதை அறிந்து செயல்பட வேண்டும். மக்கள் சேவையில் பொறுப்புணர்வுடன் ஈடுபட வேண்டும் என அமைச்சர் என்.ஆனந்த் அறிவுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com