வேளாங்கண்ணி பேராலயத்தில் விஜய் வருகைக்காக காத்திருந்து ஏமாந்த தவெக தொண்டர்கள், ரசிகர்கள்

மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
வேளாங்கண்ணி பேராலயத்தில் விஜய் வருகைக்காக காத்திருந்து ஏமாந்த தவெக தொண்டர்கள், ரசிகர்கள்
Published on

தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் 233 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது.

இந்த நிலையில் தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளர்கள் மற்றும் தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டி விஜய் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு கையில் வேலுடன் சென்ற விஜய், அதிகாலையில் நடந்த விஸ்வரூப தரிசனத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

அதனைத்தொடர்ந்து மறுநாள் மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.

விஜயின் ஆன்மிக பயணத்தின் தொடர்ச்சியாக நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், நாகூரில் உள்ள நாகூர் ஆண்டவர் தர்கா ஆகிய வழிபாட்டு தலங்களுக்கும் இன்று வழிபாடு நடத்த உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் வேளாங்கண்ணிக்கு வர உள்ளதாக தகவல் பரவியதையடுத்து அங்கு ரசிகர்கள், தொண்டர்கள் குவிந்தனர். ஆனால், விஜய் அங்கு வராத நிலையில் டிவிகே... டிவிகே... என முழக்கமிட்ட தொண்டர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

வேளாங்கண்ணி, நாகூர் தர்காவிற்கு விஜய் செல்வார் என கூறப்பட்ட நிலையில் அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com