மக்கள் கூட்டணியான நமக்கும் ஸ்டாலின் கூட்டணிக்கு மட்டும்தான் போட்டி - விஜய்

எம்எல்ஏ என்றால் அனுபவத்தை வைத்துக்கொண்டு கனிமவளங்களை கொள்ளை அடிப்பவர்களாக இருக்கக்கூடாது.
மக்கள் கூட்டணியான நமக்கும் ஸ்டாலின் கூட்டணிக்கு மட்டும்தான் போட்டி - விஜய்
Published on

சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் ஓட்டலில் த.வெ.க. வேட்பாளர்கள் அறிமுகம் கூட்டம் நடைபெற்றது. வேட்பாளர்கள் அறிமுகத்திற்கு முன்பாக த.வெ.க. தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

இது வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் மட்டுமல்ல, இது மக்களுக்கான காப்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம்.

ஒரு எம்எல்ஏ என்றால் எப்படி இருக்க வேண்டும் என்றால் அனுபவத்தை வைத்து கொள்ளை அடிப்பவர்களாக இருக்கக்கூடாது.

அனுபவத்தை வைத்துக்கொண்டு கேள்வி கேட்கும் நிருபரை அடிக்கும் எம்எல்ஏவாக இருக்கக்கூடாது.

எம்எல்ஏ என்றால் அனுபவத்தை வைத்துக்கொண்டு கனிமவளங்களை கொள்ளை அடிப்பவர்களாக இருக்கக்கூடாது.

எல்லா நேரத்திலும் எல்லா இடத்திலும் நானே நிற்க முடியாது என்பதால் என் சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளேன்.

ஒவ்வொரு வேட்பாளரையும் பார்த்து பார்த்து தேர்வு செய்துள்ளேன், அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு.

மக்கள் கூட்டணியான நமக்கும் ஸ்டாலின் கூட்டணிக்கு மட்டும்தான் போட்டி என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com