ஆளுநரை சந்திக்க மீண்டும் நேரம் கேட்ட தவெக தலைவர் விஜய்

ஆளுநர், 118 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை கொண்டு வந்தால் தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.
ஆளுநரை சந்திக்க மீண்டும் நேரம் கேட்ட தவெக தலைவர் விஜய்
Published on

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்ற தேர்தல் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. புதிய வரவான த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உள்ளது.

தமிழக ஆளுநர் அர்லேகரை சந்தித்து, விஜய் நேற்று மாலை ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது அவர், த.வெ.க.வின் 108 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரசைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 113 எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை வழங்கினார்.

ஆனால் அதை பெற்றுக்கொண்ட ஆளுநர், 118 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை கொண்டு வந்தால் தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால் விஜய் இன்று முதலமைச்சராக பொறுப்பேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆளுநர் அர்லேக்கரை சந்திக்க தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீண்டும் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்று காலை 11 மணிக்கு ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழக ஆளுநர் விஜயை ஆட்சியமைக்க அழைக்காத நிலையில் மீண்டும் நேரம் கேட்டுள்ளார். ஆளுநர் நேரம் ஒதுக்கினால் விஜய் மீண்டும் ஆளுநரை சந்திக்க வாய்ப்பு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com