த.வெ.க. அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் - கவர்னர் உரையுடன் தொடங்கியது

கடந்த மாதம் 13-ந்தேதி நடந்த நம்பிக்கை தீர்மானத்தில் விஜய் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.
CM Vijay
Published on

தமிழகத்தில் த.வெ.க. தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றுள்ளது.

இந்த கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. முதலமைச்சராக விஜய் உள்ளார். கடந்த மாதம் 13-ந்தேதி நடந்த நம்பிக்கை தீர்மானத்தில் விஜய் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.

இதையடுத்து முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக சட்டசபை கூடவேண்டும். இதையொட்டி முதலமைச்சர் தலைமையில் கடந்த 5-ந் தேதி தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் நடந்தது.

அதில் கவர்னர் உரை, புதிய அறிவிப்புகள் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் புதிய அரசு பதவி ஏற்றபின்னர், சட்டசபையின் முதல் கூட்டம் இன்று கூடியது. சட்டசபையின் முதல் கூட்டம் என்பதால், இந்த கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்கியது.

X

Maalai Malar
www.maalaimalar.com