சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு

முதலமைச்சருக்கு தலைமை நீதிபதி பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளித்தார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு
Published on: 

தமிழ் நாடு முதலமைச்சராக விஜய் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி பதவியேற்றார். முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை விஜய் சந்தித்துள்ளார். தலைமை நீதிபதியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

மரியாதை நிமித்தமாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை முதலமைச்சர் விஜய் சந்தித்ததாக தகவல் வெளியானது. தனது இல்லத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு தலைமை நீதிபதி பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளித்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் 55-ஆவது தலைமை நீதிபதியாக கடந்த மார்ச் 6-ஆம் தேதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com