திமுக கோட்டையான சென்னைக்குள் ஓட்டையை போட்ட தவெக

எம்.ஜி.ஆருக்கு பிறகு கட்சி ஆரம்பித்த உடன் பெரும் தாக்கத்தை விஜய் ஏற்படுத்தி உள்ளார்.
திமுக கோட்டையான சென்னைக்குள் ஓட்டையை போட்ட தவெக
Published on

தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 105-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. தவெக முன்னிலையில் இருப்பது அவரது ரசிகர்கள் மற்றும் அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பிறகு கட்சி ஆரம்பித்த உடன் பெரும் தாக்கத்தை விஜய் ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தி.நகரில் புஸ்ஸி ஆனந்த், எழும்பூரில் ராஜ்மோகன், திருவிக நகரில் பல்லவி, மயிலாப்பூரில் வெங்கடரமணன், அண்ணாநகர் ராம்குமார், ராயபுரத்தில் தாமு, கொளத்தூரில் வி.எஸ்.பாபு, சைதாபேட்டை அருள்பாபு, மதுரவாயல் ரேவந்த் சரண் உள்ளிட்டோர் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் சில தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

தி.மு.க.வின் கோட்டை என கருதப்பட்ட சென்னையில் த.வெ.க. வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

துறைமுகத்தில் திமுகவின் சேகர் பாபு வெற்றி பெற்றார். சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை பெற்றுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com