8 மாவட்டங்களில் ஒரு தொகுதியைக்கூட கைப்பற்றாத த.வெ.க.!

தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளை கைப்பற்றி முன்னிலை வகித்தாலும், 8 மாவட்டங்களில் ஒரு தொகுதியைக் கூட கைப்பற்றவில்லை.
8 மாவட்டங்களில் ஒரு தொகுதியைக்கூட கைப்பற்றாத த.வெ.க.!
Published on

தமிழ்நாட்டின் 17-வது சட்டமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் கடந்த மாதம் 23ஆம் தேதி நடைபெற்றது. வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றிப் பெற்றது. தனிப்பெரும்பான்மை இல்லையென்றாலும், சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க முயன்று வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திமுக 59 தொகுதிகளையும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக 47 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. ஒட்டுமொத்தமாக தவெக அதிக தொகுதிகளையும் கைப்பற்றி இருந்தாலும், ஒருசில மாவட்டங்களில் ஒருத் தொகுதியை கூட கைப்பற்றவில்லை.

தென்காசி, கன்னியாகுமரி, அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி, திருவாரூர், விழுப்புரம் ஆகிய எட்டு மாவட்டங்களில் தவெக ஒரு தொகுதியைக் கூட கைப்பற்றவில்லை.

தென்காசியின் 5 தொகுதிகளில் திமுக -4ம், அதிமுக -1ம், கன்னியாகுமரியின் 6 தொகுதிகளில் திமுக கூட்டணி 5-ம், அதிமுக 1-ம், அரியலூரில் அதிமுக கூட்டணி 2-ம், மயிலாடுதுறையில் திமுக கூட்டணி 3ம், நாகப்பட்டினத்தில் திமுக கூட்டணி 2ம், அதிமுக கூட்டணி 1 தொகுதியையும் கைப்பற்றியுள்ளன.

அதுபோல நீலகிரியில் திமுக கூட்டணி 2-ம், அதிமுக - 1ம், திருவாரூரில் திமுக கூட்டணி-2ம், அதிமுக கூட்டணி -2ம், விழுப்புரத்தில் திமுக கூட்டணி 3ம், அதிமுக கூட்டணி 4 இடங்களையும் பெற்றுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com