த.வெ.க தேர்தல் அறிக்கை: குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500 உள்பட 10 அம்ச வாக்குறுதிகளை அறிவித்தார் விஜய்

தமிழ்நாடு முழுவதும் 100 காமராஜர் பள்ளிகள் அமைக்கப்படும்.
த.வெ.க தேர்தல் அறிக்கை: குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500 உள்பட 10 அம்ச வாக்குறுதிகளை அறிவித்தார் விஜய்
Published on

மக்களின் தேர்தல் அறிக்கை என்ற பெயரில் தவெக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தவெக தலைவர் விஜய் சிறப்புரையாற்றினார்.

தமிழ்நாட்டின் முதல் பெருமை தமிழ் மொழி. தமிழ் மொழியின் முதல் பெருமை திருக்குறள். திருக்குறள் நமக்கு வழிகாட்டி. அதன் அடிப்படையில் அறம், பொருள், இன்பத்தின் அடிப்படையில் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

பின்னர், விழாவில் 10 அம்ச முக்கிய வாக்குறுதிகளை விஜய் அறிவித்தார்.

அவர் கூறியதாவது:-

ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் தரமான பட்டுச்சேலை வழங்கப்படும்.

அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் உலகத்தர அளவிலான சிகிச்சை அளிக்கும் வகையில் ரூ.25 லட்சம் இன்சூரன்ஸ்.

பள்ளி மாணவர்களின் இடைநின்றலை தடுக்க 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் தாய்மார்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 நிதி வழங்கப்படும்.

தமிழ்நாடு முழுவதும் 100 காமராஜர் பள்ளிகள் அமைக்கப்படும்.

இளங்கலை முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பிணையில்லா கடன் வழங்கப்படும்.

டிப்ளமோ முடித்து வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு வேலையில்லா கால நிவாரணமாக ரூ.2,500 வழங்கப்படும்.

பட்டம் முடித்து வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு வேலையில்லா கால விவாரணமாக ரூ.4,000 வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள தனியார், பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கு 75 சதவீதம் வேலை தரும் வகையில் சட்டம் இயற்றப்படும்.

5 ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகள் வேளாண் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல்.. 50 சதவீத அளவிற்கு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

அனைத்து மீனவர்களுக்கும் வீடு கட்டித்தரும் லட்சிய வீடு திட்டம் செயல்படுத்தப்படும்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதந்தோம் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com