சென்னை சட்டமன்ற தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும் த.வெ.க. - உறுதியாகுமா வெற்றி?

சென்னை மாதவரம் தொகுதியில் விஜய்யின் தவெகவிற்கே பெரும் ஆதரவு உள்ளது.
சென்னை சட்டமன்ற தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும் த.வெ.க. - உறுதியாகுமா வெற்றி?
Published on

தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக, சட்டமன்ற தேர்தலையொட்டி வலுவான கூட்டணி அமைப்பைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் பெரும் கூட்டணியை அமைத்தாலும், தனது வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடி வருகிறது.

மறுபுறம் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்றத் தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீமான் தலைமையிலான நாதக எந்தக் கூட்டணியும் இன்றி தனித்து நின்று கணிசமான வாக்குகளைப் பெற்று வருகிறது. இம்முறையும் கூட்டணி இன்றியே தேர்தலை சந்திக்கிறது.

இதனிடையே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதில் மக்களின் ஆதரவு எந்தக் கட்சிக்கு அதிகம் உள்ளது என்பதை கண்டறிய ஊடகங்கள் பலவும் கருத்துக்கணிப்பு நடத்தி வருகின்றன.

அந்தவகையில் சென்னை மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புழல் பகுதி மக்களிடையே மாலைமலர் தரப்பில் ஒரு ஜாலி VOX POPS எடுக்கப்பட்டது. அதன்படி அப்பகுதியில் விஜய்க்கே பெரும் ஆதரவு உள்ளது. இரண்டாவது இடத்தில் திமுக உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com