சென்னையில் விஜய் பரப்புரைக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல்

தவெகவின் மாவட்ட நிர்வாகிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் விஜய் பரப்புரைக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல்
Published on

சென்னையில் நாளை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரைக்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விஜய் சார்பில் நாளை வில்லிவாக்கம், அண்ணா நகர், விருகம்பாக்கம், தியாகராய நகர் ஆகிய 4 தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கேட்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை அனுமதி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

காவல்துறை தரப்பில் வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட சிட்கோ நகரில் மட்டும் பேசுவதற்கும், மற்ற இடங்களில் பேச அனுமதி வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தி.நகரில் விஜய் வருகையால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எனவே அனுமதி வழங்க முடியாத நிலை உள்ளது என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேசமயம் 4 இடங்களிலும் அனுமதி வேண்டும் என தொடர்ந்து தவெகவின் மாவட்ட நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com