திருச்சி கிழக்கு: தேவாலயத்தைத் தொடர்ந்து மசூதியில் விஜய் தொழுகை!

நடிகர் விஜய் தான் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் இன்று பிரசாரம் செய்கிறார்.
திருச்சி கிழக்கு: தேவாலயத்தைத் தொடர்ந்து மசூதியில் விஜய் தொழுகை!
Published on

தமிழ்நாட்டில் இன்னும் 3 நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் நடிகரும், தவெக தலைவருமான விஜய் தனது சொந்த தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒருபகுதியாக இன்று தேர்தல் பரப்புரைக்காக திருச்சி சென்றுள்ளார். திருச்சி சென்ற விஜய் விமான நிலையம் அருகிலுள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் பிரார்த்தனை செய்தார்.

தேவாலயத்திற்குள் நுழைந்த விஜய், முழங்காலிட்டு நகர்ந்து சென்று மனமுருகிப் பிரார்த்தனை செய்தார். இந்தத் தேவாலயம் திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.

இந்நிலையில் தேவாலயத்தைத் தொடர்ந்து அருகில் இந்த மசூதி ஒன்றிற்கும் சென்று விஜய் தொழுகை நடத்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com