த.வெ.க. முதலாம் ஆண்டு விழா... இன்று முதல் பாஸ் விநியோகம்?

த.வெ.க. நிர்வாகிகள் முழு வீச்சில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
த.வெ.க. முதலாம் ஆண்டு விழா... இன்று முதல் பாஸ் விநியோகம்?
Published on

சென்னை:

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி முதலாம் ஆண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையடுத்து முதலாம் ஆண்டு விழாவை விமரிசையாக கொண்டாட த.வெ.க. நிர்வாகிகள் முழு வீச்சில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து வருகிற 26-ந்தேதி ஈ.சி.ஆர். சாலையில் உள்ள Confluence Centre-ல் த.வெ.க. முதலாம் ஆண்டு விழா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்காக சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கான பாஸ் இன்று முதல் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com