

234 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23 அன்று தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. காலை 10.50 மணி நிலவரப்படி தவெக 106 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
அதிமுக கூட்டணி 75 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆளும் திமுக கூட்டணி 51 இடங்களில் முன்னிலையுடன் 3ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை கொண்டாட்டங்களுக்காக கொண்டுவரப்பட்ட பொருட்கள் மற்றும் அமைக்கப்பட்ட பந்தல் அகற்றப்பட்டு வேனில் ஏற்றி திரும்பக் கொண்டு செல்லப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இருப்பினும் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அங்கிருந்த திமுக தொண்டர் ஒருவர், அது நேற்று இரவு நடந்த நிகழ்வொன்றுக்காக அமைக்கப்பட்ட ஏற்பாடுகள் என்றும் அவற்றுக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்துள்ளார். காலை 11 மணிக்கு பிறகு திமுக முன்னிலைக்கு வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.