தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்

மகேஷ் குமார் அகர்வால் சென்னை போக்குவரத்து துணை ஆணையராகவும் பதவி வகித்துள்ளார்.
mahesh kumar agarwal
Published on

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்பட்டது. இதனை முன்னிட்டு தேர்தல் ஆணைய உத்தரவின்படி, பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. இதன்படி, தமிழகத்திற்கான பொறுப்பு டி.ஜி.பி.யாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டார்.

இதற்கிடையே, தேர்தல் முடிந்து த.வெ.க. தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது.

தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. பதவிக்காக ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் மகேஷ் குமார் அகர்வால் ஆகிய 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு,அதற்கான பட்டியல் யு.பி.எஸ்.சி.க்கு அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக டெல்லியில் நடந்த கூட்டத்தில் இந்த 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யு.பி.எஸ்.சி. ஒப்புதல் அளித்தது. அவர்கள் 3 பேரில் ஒருவர் விரைவில் டி.ஜி.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், தமிழகத்தின் புதிய டி.ஜி.பியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

யார் இந்த மகேஷ்குமார் அகர்வால்?

மகேஷ்குமார் அகர்வால் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

சட்டம்-ஒழுங்கு பணியில் மிகவும் அனுபவம் கொண்டவர்.

1994-ம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் அதிகாரி.

சட்டப்பிரிவில் பி.ஏ. பட்டமும், வழக்கறிஞருக்கான சட்டப் படிப்பும் படித்தவர்.

சென்னை போக்குவரத்து துணை ஆணையராகவும் பதவி வகித்தவர்.

சென்னை பூக்கடை காவல்துறை துணை ஆணையராக பணிபுரிந்தவர்.

தூத்துக்குடி எஸ்.பி. ஆக இருந்தவர்.

சிசிடிவி கேமராக்களை சென்னையில் நிறுவ முக்கியமாக செயல்பட்டவர்.

மெச்சத்தகுந்த பணிக்காக முதல்வர் பதக்கத்தைப் பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com