

தமிழ்நாட்டில் அனைத்து வகை அரசு பள்ளிகளின் மாணவ, மாணவியருக்கு ஏப்ரல் 17-ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 அன்று முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவித்திருந்தது.
இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என பெற்றோர், ஆசிரியர் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அனைத்து வகுப்புகளும் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 4-ம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.