

உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் படி, 2013-ம் ஆண்டு மே 23-ம் தேதி முதல் புகையிலை மற்றும் நிகோட்டினை சேர்மமாகக் கொண்ட உணவுப் பொருட்கள் மீதான தடையை அரசு அமல்படுத்தியது. இந்தத் தடை ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.
2027ம் ஆண்டு மே 23-ம் தேதி வரை குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கு தடையை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.