தவெக தலைவர் விஜயை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு?

த.வெ.க.வின் 108 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரசைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 113 எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை வழங்கினார்.
தவெக தலைவர் விஜயை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு?
Published on

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்ற தேர்தல் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. புதிய வரவான த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உள்ளது.

தமிழக கவர்னர் அர்லேகரை சந்தித்து, விஜய் நேற்று மாலை ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது அவர், த.வெ.க.வின் 108 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காங்கிரசைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 113 எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை வழங்கினார்.

ஆனால் அதை பெற்றுக்கொண்ட கவர்னர், 118 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை கொண்டு வந்தால் தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தமிழக ஆளுநரை இன்று மீண்டும் சந்தித்தார். ஆளுநர் அழைப்பின் பேரிலேயே அவர் ஆளுநர் மாளிகை சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

113 பேரின் ஆதரவு இருப்பதாக விஜய் கூறி உள்ள நிலையில் பெரும்பான்மை குறித்து கேட்டுள்ளார். பெரும்பான்மைக்கு தேவையான 118 பேரின் ஆதரவு குறித்து ஆளுநர் சில விளக்கங்களை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்றது. இதையடுத்து விஜய் புறப்பட்டு சென்றார்.

இதன்பின் தவெக தலைவர் விஜயை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சற்று நேரத்தில் அறிவிப்பு வெளியாக உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com