மக்களுக்கு சேவையாற்றிய பழைய அதிமுக இறந்துவிட்டது; அது முடிவுக்கு வந்துவிட்டது: ராகுல் காந்தி தாக்கு

தமிழ்நாட்டு மக்களுக்கு சேவையாற்றிய அந்தப் பழைய, நல்ல அதிமுக இப்போது இல்லை. இன்றைய அதிமுக என்பது வெறும் வெற்று ஓடு மட்டுமே என ராகுல் காந்தி விமர்சித்தார்.
மக்களுக்கு சேவையாற்றிய பழைய அதிமுக இறந்துவிட்டது; அது முடிவுக்கு வந்துவிட்டது: ராகுல் காந்தி தாக்கு
Published on

காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

நிதீஷ் குமார் ஏதோ ஒரு வகையில் சமரசம் செய்து கொண்டார். அதனால்தான் அவர் அமைதியாக மாநிலங்களவை உறுப்பினராகச் சம்மதித்தார். நிதீஷ் குமார் முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக பாஜக தலைவர் அப்பதவியில் அமர்த்தப்பட்டடார் நிதீஷ் குமார் சமரசம் செய்து கொண்டதால் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் அமைதியாக மாநிலங்களவை சென்றார்.

நிதீஷ் குமாரின் கடந்தகாலச் செயல்களே, பாஜக அவரை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வழிவகுத்தன. பீகாரில் செயல்படுத்திய இத்தகைய 'மாதிரியை' (model) தமிழ்நாட்டிலும் செயல்படுத்த பாஜக விரும்புகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, தமிழ் மக்களைப் பாதுகாத்த சிறந்த தலைவர்களை அதிமுக கொண்டிருந்தது. தமிழ்நாட்டு மக்களுக்கு சேவையாற்றிய அந்தப் பழைய, நல்ல அதிமுக இப்போது இல்லை. இன்றைய அதிமுக என்பது வெறும் வெற்று ஓடு மட்டுமே. மக்களுக்கு சேவையாற்றிய அந்தப் பழைய அதிமுக இறந்துவிட்டது. அது முடிவுக்கு வந்துவிட்டது.

அதிமுக தலைவர்கள் தங்கள் ஊழல் காரணமாக சமரசம் செய்து கொண்டுள்ளனர். அதிமுக-வை பயன்படுத்தித் தமிழ்நாட்டிற்குள் நுழைய பாஜக திட்டமிட்டுள்ளது.

அதிமுக-வில் அர்ப்பணிப்புமிக்க தொண்டர்கள் உள்ளனர். ஆனால், அவர்கள் கட்சியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை.

த்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோரின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளனர்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com