TN Election 2026 | 175 இடங்களில் உதயசூரியன்..!

தற்போது வரை தி.மு.க. 168 இடங்களில் நேரடியாகவும், கூட்டணி கட்சிகள் 7 இடங்களில் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுகின்றன
TN Election 2026 | 175 இடங்களில் உதயசூரியன்..!
Published on

தமிழக சட்டசபை தேர்தலுக்காக தி.மு.க. வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. கூட்டணியில் அதிக கட்சிகள் இடம் பிடித்திருப்பதால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை கடும் இழுபறியாக சென்றது. ஒவ்வொரு கட்சிகளும் இரட்டை இலக்க தொகுதியில் போட்டியிட விரும்பின. ஆனால், திமுக அந்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி எவ்வளவு குறைக்க முடியுமோ, அந்த அளவிற்கு தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து வழங்கியது.

விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, மக்கள் நீதி மய்யம் கட்சி ஆகியவை உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை கடும் இழுபறியாக சென்றது. இந்த நிலையில் இன்று விடுதலை சிறுத்தைகளுக்கு 8 தொகுதிகளையும், தேமுதிக-விற்கு 10 தொகுதிகளையும் ஒதுக்கியது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு குறைவான தொகுதிகளை ஒதுக்க முன்வந்தது. அத்துடன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கோட்டுக்கொண்டது. இதனால் தேர்தலில் போட்டியில்லை என்ற முடிவை கமல்ஹாசன் எடுத்துள்ளார்.

இன்னும் கர்ணாஸ் மற்றும் தனியரசு கட்சிகள் மட்டுமே உள்ளன. இவர்களுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கினாலும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிடுவார்கள்.

இதனடிப்படையில் இதுவரை திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு காங்கிரஸ் (28), தேமுதிக (10), விடுதலை சிறுத்தைகள் (8), சிபிஐ (5), சிபிஎம் (5), இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (2), கொ.ம.தே.க. (2), மனித நேய மக்கள் கட்சி (2), மதிமுக {4 (3 உதயசூரியன், 1 தனி சின்னம்) } 66 தொகுதிகள் ஒதுக்கியுள்ளது.

இந்த 66 தொகுதிகளில் 7 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் {கொ.ம.தே.க. (2), மனித நேய மக்கள் கட்சி (2), மதிமுக (3)} உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிடுன்றன.

தற்போது நிலவரப்படி 66 தொகுதிகளை தவிர்த்து திமுக கைவசம் 168 தொகுதிகள் உள்ளன. கூட்டணி கட்சிகள் 9 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால், தமிழக சட்டசபை தேர்தலில் உதயசூரியன் 175 தொகுதியில் களம் காண்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com