இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு.. விஜயகாந்த் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமான பதிவு

24 போலீசார் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மரியாதை.7 மணியளவில் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு.. விஜயகாந்த் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமான பதிவு
Published on

மறைந்த விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக, தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தில் உடல் சந்த பேழையில் வைக்கப்பட்ட பிறகு, விஜயகாந்த் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பிறகு, விஜயகாந்த் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. 24 போலீசார் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மரியாதை செலுத்தினர். பின்னர், 7 மணியளவில் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே" என விஜயகாந்த் குறித்து உருக்கமாக தெரிவித்துள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com