கல்குவாரி வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி

ஈரோடு மாவட்டத்தில் கல்குவாரியில் நடந்த விபத்தில் 2 பேர் பலியாகினர். இதில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவித்தார்.
கல்குவாரி வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி
Published on

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், வாணிபுத்தூர் உள்வட்டம் புஞ்சைதுறையம்பாளையம் 'அ' கிராமத்தில் அனுமதி இன்றி செயல்பட்டு வந்த தனியார் கல்குவாரியில் நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த வெடிவிபத்தில் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கோபிசெட்டிபாளையம் வட்டம், அயலூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் குமார் மற்றும் கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம், மாட்டவள்ளி பகுதியைச் சேர்ந்த அஜீத் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்துடன், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com