கொளத்தூரில் 5 ஆண்டுகால சாதனை விளக்கப் புத்தகத்தை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார்.
கொளத்தூரில் 5 ஆண்டுகால சாதனை விளக்கப் புத்தகத்தை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் மு.க.ஸ்டாலின் தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்," திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக நிற்கப்பட்டிருக்கக்கூடிய என்னை அமோகமான வாக்கு வித்தியாசத்தில் கொளத்தூர் மக்கள் வெற்றி பெற வைப்பார்கள்" என்று முழு நம்பிக்கையுடன் கூறினார்.

கொளத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார்.

பின்னர், கொளத்தூர் தொகுதியில் தனது 5 ஆண்டுகால சாதனைகளை விளக்கும் புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

கொளத்தூர் சட்டமன்ற தொகுதி சாதனைகளை விளக்கும் புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com