தமிழக பட்ஜெட்: ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ரூ.2500 கோடி ஒதுக்கீடு

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.13,720 கோடி ஒதுக்கீடு. கோவையில் 20 லட்சம் சதுர அடியில் ரூ. 1,100 கோடி செலவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.
தமிழக பட்ஜெட்: ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ரூ.2500 கோடி ஒதுக்கீடு
Published on

சென்னை:

தமிழக சட்டசபையில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்த முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:-

* கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.13,720 கோடி ஒதுக்கீடு.

* மகளிர் இலவச பேருந்து பயண 'விடியல் பயணம்' திட்டத்திற்கு இந்த ஆண்டில் ரூ.3050 கோடி ஒதுக்கீடு.

* நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 25,858 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

* பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,042 கோடி நிதி ஒதுக்கீடு.

* ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ரூ.2500 கோடி ஒதுக்கீடு.

* கோவையில் 20 லட்சம் சதுர அடியில் ரூ. 1,100 கோடி செலவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.

* இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கு ரூ.440 கோடி நிதி ஒதுக்கீடு.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com