தமிழக பட்ஜெட் - துறை வாரியாக முதலமைச்சர் விஜய் ஆலோசனை

தவெக அரசின் முதல் பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்பட உள்ளது என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது.
CM Vijay
Published on

தமிழக வெற்றிக்கழகம் தலைமையிலான தமிழ்நாடு அரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது.

தவெக தலைமையிலான புதிய கூட்டணி அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 18-ந்தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்றது. இதையடுத்து தவெக அரசின் முதல் பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்பட உள்ளது என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது.

இந்நிலையில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்வது தொடர்பாக துறை வாரியாக இன்று முதல் 22-ந்தேதி வரை முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழக பட்ஜெட் இம்மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com