

பா.ஜ.க.வில் இருந்து விலகிய அண்ணாமலை புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாகவும், அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அண்ணாமலை கட்சியில் நேற்று ஒரே நாளில் சுமார் 10லட்சத்துக்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், பா.ஜ.க.வில் இருந்து அண்ணாமலை விலகியதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் பலரும் பா.ஜ.க.வில் இருந்து விலகி வருகின்றனர்.
இந்த நிலையில், புதிய கட்சி தொடங்குவதாக அண்ணாமலை அறிவித்துள்ள சூழலில் நாளை மறுநாள் பா.ஜ.க. மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. திருச்சியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறு மாநில நிர்வாகிகளுக்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டத்தில் பங்கேற்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பா.ஜ.க. எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.