

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் விஜய் இன்று பதிலளித்தார். அவரது உரைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து, சபையில் கடும் அமளி நிலவியது.
தி.மு.க. மற்றும் த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் எழுந்து நின்று கோஷம் இட்டனர். இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து பேசிய முதல்வர் விஜய் பதிலுரையை முடித்தார். அதன்பின், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த சைகையை சபாநாயகரிடம் அனுமதி பெற்று முதல்வர் விஜய் செய்து காட்டியதும் சட்டசபை அதிர்ந்தது.
இந்நிலையில், தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.