TN Assembly Election| சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை- அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தி அறிவிப்பு

என்னை உறுதியாக ஆதரித்து நம்பிக்கை அளித்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
TN Assembly Election| சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை- அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தி அறிவிப்பு
Published on: 

தமிழக சட்டசபைக்கு வருகிற 23-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். இதனால் தேர்தலில் போட்டியிடும் வேட்மனு தாக்கல் செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, தி.மு.க. சார்பில் ராணிப்பேட்டை தொகுதியில் வினோத் காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், தந்தையின் விருப்பத்தை கருத்தில் கொண்டு தான் போட்டியிடப்போவதில்லை என வினோத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வினோத் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டசபை தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அரிய வாய்ப்பை எனக்கு அளித்த தலைவருக்கும், சகோதரர் உதயநிதி ஸ்டாலினுக்கும் எனது இதயம் கனிந்த நன்றி.

ஆனால் என் தந்தையார் மீண்டும் போட்டியிடும் உறுதியான விருப்பத்தை கருத்தில் கொண்டு, இந்த வாய்ப்பை அவருக்கு மரியாதையுடன் மீண்டும் ஒப்படைக்க முடிவு செய்துள்ளேன்.

என்னை உறுதியாக ஆதரித்து நம்பிக்கை அளித்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்னும் நீண்ட வாழ்க்கை முன் உள்ளது என்பதில் உற்சாகத்துடன், சேவை செய்து சாதிக்க நான் உறுதியுடன் இருக்கிறேன் என கூறியுள்ளார்.

இதனால் ராணிப்பேட்டை தொகுதியில் அமைச்சர் காந்தி மீண்டும் போட்டியிடுவார் என்றும் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com