

சென்னை:
தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, தொகுதி பங்கீடு, பிரசாரம் ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறார். அவர் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்து தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார்.
இதையொட்டி சீமான் முதல் கட்ட பிரசாரத்தை வருகிற 23-ந்தேதி (நாளை மறுநாள்) தொடங்குகிறார். அதன் விவரம் வருமாறு:-
23-ந்தேதி-காலை 10.30 மணி திருத்தணி கோவிலில் வழிபாடு. மாலை 4.30 மணி திருத்தணி கமலா திரையரங்கம் அருகில் பிரசாரத்தை தொடங்குகிறார். அதன் பிறகு மாலை 6.30-மணிக்கு சோளிங்கர், இரவு 8.30 மணிக்கு ராணிப்பேட்டையில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
24-ந்தேதி காலை 10.30-மணிக்கு வேலூர், 11.30 மணி குடியாத்தம், மதியம் 12.30 மணி ஆம்பூர், மாலை 6.30 மணி திருப்பத்தூரில் பொதுக்கூட்டம், இரவு 8.30 மணிக்கு ஊத்தங்கரையில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
25-ந்தேதி காலை 10.30 மணிக்கு கிருஷ்ணகிரி, 11.30 மணிக்கு சூளகிரி, மாலை 4.30 மணிக்கு பாலக்கோடு, 6.30 மணிக்கு பாப்பிரெட்டிப்பட்டியில் பிரசாரம் செய்து இரவு 8.30 மணிக்கு பொன்னகரத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
26-ந்தேதி காலை 10.30-மணிக்கு மேட்டூரில் பிரசாரத்தை தொடங்கும் சீமான் 12 மணிக்கு ஓமலூர், மதியம் 1 மணிக்கு சேலம், மாலை 4.30 மணிக்கு வாழப்பாடியில் பிரசாரம் செய்கிறார். 6.30 மணிக்கு ஆத்தூர், இரவு 8.30 மணிக்கு கள்ளக்குறிச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
27-ந்தேதி காலை 10.30 மணிக்கு சங்கராபுரத்தில் பிரசாரம் செய்கிறார். அதைத் தொடர்ந்து மதியம் 11.30 மணிக்கு திருக்கோவிலூர், மாலை 4.30-மணிக்கு திருவண்ணாமலை, 6.30 மணிக்கு சேத்துப்பட்டு, இரவு 8.30 மணிக்கு வந்தவாசியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
28-ந்தேதி காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரத்தில் பிரசாரத்தை தொடங்கும் சீமான் 11.30 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர், மதியம் 12.30 மணிக்கு பூந்தமல்லியிலும் மாலை 6.30 மணிக்கு திருவள்ளூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், இரவு 8.30 மணிக்கு ஆவடியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பிரசாரம் செய்கிறார்.