தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள புதிய இணையதள முகவரி

5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 4-ந் தேதி திங்கட்கிழமை நடைபெற உள்ளது.
தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள புதிய இணையதள முகவரி
Published on

தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த 5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 4-ந் தேதி (நாளை மறுநாள்) திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இந்த 5 மாநில தேர்தல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள தேர்தல் ஆணையம் பிரத்யேகமாக https://results.eci.gov.in/யிட்டுள்ளது. இந்த இணையதள முகவரியில் வருகிற 4-ந் தேதி காலை 8 மணி முதல் 5 மாநில தேர்தல் முடிவுகளை தனித்தனியாக உடனடியாக தெரிந்து கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது.

இது தவிர 'ECINET' மற்றும் 'Voter Helpline' என்ற செல்போன் செயலிகள் மூலமும் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com