TN Assembly Election| ம.தி.மு.க.வில் நாளை விருப்ப மனு விநியோகம்

ஆட்சிமன்றக் குழுவினர் முன்னிலையில் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
TN Assembly Election| ம.தி.மு.க.வில் நாளை விருப்ப மனு விநியோகம்
Published on

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 30-ந்தேதி தொடங்க உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.

அந்த வகையில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க.வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 4 தொகுதிகளில் 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனிச்சின்னத்திலும் போட்டியிட உள்ளது.

இந்த நிலையில், ம.தி.மு.க. சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

நாளை காலை 10 மணி முதல் 12 மணி வரை ரூ.ஆயிரம் கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களை பெறலாம். பொதுத்தொகுதிக்கு ரூ25 ஆயிரம், தனித்தொகுதிக்கு ரூ.10 ஆயிரம் செலுத்தி பிற்பகல் 3 மணிக்குள்ளாக விருப்ப மனுவை வழங்க வேண்டும்.

பிற்பகல் 3.30 மணிக்கு ஆட்சிமன்றக் குழுவினர் முன்னிலையில் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com