TN Assembly Election | மார்ச் 23-ந்தேதி பிரசாரத்தை தொடங்குகிறார் சீமான்

சீமான் திருத்தணியில் இருந்து தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
TN Assembly Election | மார்ச் 23-ந்தேதி பிரசாரத்தை தொடங்குகிறார் சீமான்
Published on

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23-ந் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதனையடுத்து கட்சியின் தேர்தல் அறிக்கையை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று முன்தினம் வெளியிட்டார்.

நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைந்தால் எப்படி செயல்படும் என்பதை குறிக்கும் வகையில் செயற்பாட்டு வரைவு எனும் பெயரில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

இலவச வாக்குறுதி, கவர்ச்சி திட்டங்கள் இல்லாத நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அனைவருக்கும் அரசு வேலை, தமிழகத்துக்கு 5 தலைநகரங்கள் உள்பட பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு சீமான் மார்ச் 23-ந்தேதி தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.

சீமான் திருத்தணியில் இருந்து தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். திருத்தணி முருகன் கோவிலில் வழிபாடு செய்துவிட்டு பிரசாரத்தை அவர் தொடங்குகிறார். மார்ச் 23-ந்தேதி முதல் மார்ச் 28-ந்தேதி வரை முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை அவர் மேற்கொள்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com