TN Assembly Election| திருச்சி கிழக்கிலும் த.வெ.க. தலைவர் விஜயின் வேட்புமனு ஏற்பு

இரு தொகுதிகளிலும் த.வெ.க. தலைவர் விஜயின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதால் அத்தொகுதி மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
TN Assembly Election| திருச்சி கிழக்கிலும் த.வெ.க. தலைவர் விஜயின் வேட்புமனு ஏற்பு
Published on

தமிழ்நாடு சட்டசபைக்கு வருகிற 23-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி கடந்த மாதம் 30-ந்தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. வேட்புமனுவை தாக்கல் செய்ய நேற்றைய தினம் கடைசி நாளாகும். மேலும் வேட்புமனுவை திரும்பப்பெற நாளை மறுநாள் கடைசி நாளாகும்.

வேட்புமனு தாக்கலுக்கான செய்வதற்கு நேற்றுடன் காலஅவகாசம் நிறைவடைந்த நிலையில் இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சட்டசபை தேர்தல் முதல் முறையாக சந்திக்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிடும் தொகுதிகளில் அவரது வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

திருச்சி கிழக்கு சட்சபை தொகுதியில் போட்டியிடும் விஜய் தாக்கல் செய்த வேட்புமனு ஏற்கப்பட்டது. இதேபோல் சென்னை பெரம்பூர் தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுவும் ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இரு தொகுதிகளிலும் த.வெ.க. தலைவர் விஜயின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதால் அத்தொகுதி மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com