TN Assembly Election| இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

திருத்துறைப்பூண்டி, தளி, பவானிசாகர், திருப்பூர் வடக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.
TN Assembly Election| இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
Published on

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகளில் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருத்துறைப்பூண்டி, தளி, பவானிசாகர், திருப்பூர் வடக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.

இந்த நிலையில் 5 தொகுதிகளில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் குறித்து இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

தளி தொகுதியில் டி.ராமச்சந்திரன், திருத்துறைப்பூண்டி தொகுதியில் மாரிமுத்து, திருப்பூர் வடக்கு தொகுதியில் ரவி, பவானிசாகர் தொகுதியில் பிஎல் சுந்தரம், ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் மகாலிங்கம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com