

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில், பணியில் இருந்த போலீஸ் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அதிகாலையில் சாலையின் மையத் தடுப்பில் மோதி நின்ற லாரியை அப்புறப்படுத்தும் பணியில் காவலர் ரவிச்சந்திரனும், ஓட்டுநரும் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த கார் மோதியதில் காவலர், லாரி ஓட்டுநர் மற்றும் காரில் இருந்த 4 பேர் என 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.